நினைவுகள் ஆயிரம் கொடுத்துச் சென்றாய்

நித்தமும் என் மனதில் நிலைத்து நின்றாய்

காதலில் பெரும் வலி பிரிவுதான் என்பாய்

பிரிந்தாலும் பரிவருக்கும் என்றும் அன்பாய்

பண்பு எனப்படுவது...

 பலருடன் பழகுவதாலோ - படித்துப்

பட்டங்கள் பல பெறுவதாலோ அல்ல

பகுத்தறிவைச் சிந்தையில் நிறுத்தி

பக்குவப்பட்ட மனம் கொண்டு

பாடங்களை அனுபவத்தில் கற்று

பிற உயிர்க்கு தீங்கிழைக்காது

பிறரைத் தம்போல் நேசித்துப்

பழகுவதால் வருவதே பண்பு!

   இயற்கையின் இரகசியம்

பட்டுவர்ண ரோஜா மலருக்கு தெரிவதில்லை..

தன்னைத் தாங்குவது முட்களாலான தண்டென்பது!


குளத்தில் மலரும் தாமரை அறிவதில்லை...

தான் சேற்றிலிருந்து வெளிபடுகிறோமென்பதை!


வண்ணத்துப்பூச்சிக்கு புரிவதில்லை...

முன் புழுவாயிருந்தோம் என்பதை!


 பாயும் அருவிகள் அறிவதில்லை....

பனிப்பாறையின் உருக்கமென்பதை!


கற்ச்சிற்பம் காண்பதில்லை.....

கல்லில் இருந்து வெளிப்பட்டதை!


முளைக்கும் செடி உணர்வதில்லை....

விதையிலிருந்து வெளிப்படுவதை!


பிறக்கும் குழந்தைக்குத் தெரிவதில்லை....

பத்துமாதம் கிடந்ததாயின் கருவறை!


ஆறறிவுக் கொண்ட மனிதனுக்குப் புரிவதில்லை..

அகிலத்தைக் காக்கும் இறை(யற்கை)யின் இரகசியம்!

நமது கடமை

 நமது கடமை

நவரசநடிப்பை வெளிப்படுத்த நாடகமாடும்

நடிகன் கதாப்பாத்திரம் பல ஏற்கலாம்

நாடாள்பவன் நவரச நடிகனானால்....

நாட்டுமக்களின் வாழ்கை சீரழிகிறது..

நல்வாழ்வோ பகல் கனவாகிறது..

நல்லுறுதியை நாமனைவரும் ஏற்போம்

நுண்ணறிவுமிக்க ஆட்சியாளரை தேர்ந்தெடுப்போம்

நலமுடனே நாட்டை காத்து நற்பாதையில் பயணிப்போம்.